பாரிய மண்சரிவு: 134 பேர் புதையுண்டதாக அச்சம்?

மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் புதையுண்ட 14 சடலங்கைள மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். எனினும் இன்னும் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரநாயக்க, எலங்கபிட்டிய சாமசர மலை இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டது. மலையடிவார கிராமங்களில் காணப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
மலையின் நூறு ஏக்கர் பகுதி சுமார் ஒன்றரை கிலோ மீற்றருக்கு கீழ் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவு அனர்த்தம் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காணப்படுவதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினமும் மாலை 4.30 அளவில் கடுமையான மழை பெய்த காரணத்தினாலும் மண்சரிவு அபாயம் நீடித்த காரணத்தினாலும் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையாக பதிவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எந்த தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை - கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச...
இன்புளுவன்சா ஏ வைரஸின் தாக்கம் அதிகரிக்க கூடும் என பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்த...
அக்குபஞ்சர் சிகிச்சை – சிகிச்சை பெறச்சென்ற நபர் ஒரவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிர...
|
|