பாரிய தீ பரவல் – வத்தளையில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசம்!

வத்தளை – மாபோல – வுவவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசமாகியுள்ளன.
அத்துடன் வீடுகளில் இருந்த 20 ஆடுகள் வரை பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பிற்காக கொழும்பு நகர சபையிற்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்களும், கடற்படையினருக்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கசிவே தீ பரவலுக்கு காரணமாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில், தீ பரவல் குறித்து வத்தளை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Related posts:
மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டாம் -கஜனின் தாய்!
வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் !
இயற்கையின் மாற்றம் : மக்களே எச்சரிக்கை!
|
|