பாரிய தீப்பரவல் – மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை!

Tuesday, May 7th, 2019

கிரிபத்கொடையில் மூன்று விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த விற்பனை நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், பின்னர் அது மற்றைய விற்பனை நிலையங்களுக்கு பரவியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக கம்பஹா தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: