பாரிய சவால்களுக்கு மத்தியில் முகமாலை கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கை – 8 வருடங்களில் 193 பேர் பாதிப்பு!

Friday, July 27th, 2018

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றல் பணி பாரிய சவாலாக உள்ளதென கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் கிளாலி தொடக்கம் முகமாலை வரைக்குமான பகுதிகள் வெடிபொருள் அகற்றுவதில் பாரிய சவால் நிறைந்த பகுதியாகக் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதிகளில் மிகவும் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுகின்றமை மற்றும் தற்போதைய வறட்சி ஆகியன கண்ணிவெடியை அகற்றுவதில் சவாலாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 2010 ஆம் ஆண்டு 27 வெடிபொருள் விபத்துக்களில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் 17 வெடி விபத்துக்களில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் கண்ணிவெடியால் 193 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டு செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: