பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்!

Friday, March 31st, 2017

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமை 9 ஆசனங்களைக் கொண்டிருந்த பதுளை மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு 8 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 6 ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு 7 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு அட்டையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேறு எந்த மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: