பாரத பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Thursday, December 2nd, 2021

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடியை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய தினம், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திந்து, பசில் ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது,  இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதியமமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பசில் ராஜபக்ஷ மேற்கொள்ளும்  முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: