பான் கீ மூன் இன்று யாழ். விஜயம்!

Friday, September 2nd, 2016

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று யாழ்ப்பாணம் வருகைதரகின்றார்.

இதன்போது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரை அவர் சந்திக்கவுள்ளார்.

சந்திப்புக்களைத் தொடர்ந்து வலி.வடக்குப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களையும் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறியவுள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இலங்கை வந்தடைந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், அன்று இரவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தார்.

அதன் பின்னர் நேற்று வியாழக்கிழமை முற்பகல் காலிக்குச் சென்ற அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். காலியில் சர்வமதத் தலைவர்கள் குழுவையும் அவர் சந்தித்திருந்தார். நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இடம்பெற்றது..

இன்று ஐ.நா செயலாளர் நாயகம் யாழ்ப்பாணம் செல்வதை முன்னிட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: