பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Wednesday, May 1st, 2019

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு நடைமுறையைக் கருத்தில்கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகின்றது.

பாதுகாப்புத் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள திகதிக்கு அமைய மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்களை மீளத்திறப்பதற்கான திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களை ஆரம்பித்ததன் பின்னரான மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது ஆள் அடையாள அட்டைகளை எப்போதும் காட்சிப்படுத்துமாறும் பல்கலைக் கழகத்திற்குள் பிரசேிப்பதற்கு முன்னர் தமது பைகள் பொதிகளை பரிசோதிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: