பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!
Friday, July 12th, 2019வெளிநாடுகளில் உள்ள தூதரங்களின் தொழிலாளர் பிரிவின் கீழ் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதில் அதிகமானோர் குவைட் தூதுவராலயத்தின் பாதுகாப்பு வீடுகளில் தங்க வைக்கப்பட்டவர்கள் என்பதுடன், 588 பேர் இவ்வாறு நாட்டுக்கு வந்துள்ளனர்.
இதுதவிர சவுதியில் இருந்து 18 பேர், ஜோர்தானில் இருந்து 12 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
2019ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 95,908 பேர் தொழிலுக்காக வௌிநாடு சென்றுள்ளதுடன், அதில் 56,526 பேர் ஆண் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண் தொழிலாளர்கள் அதிகமாக கட்டார் நாட்டிற்கு சென்றுள்ளதுடன், அவர்களின் மொத்த எண்ணிக்கை 16,626 ஆகும்.
2019 ஜூன் மாதம் வரையான காலத்தில் 39,382 பெண் தொழிலாளர்கள் வௌிநாடு சென்றுள்ளதுடன் அது மொத்த வௌிநாடு சென்றுள்ள தொழிலாயர்களில் 41 வீதம் ஆகும்.
இதேவேளை சவுதி நாட்டுக்கு தொழிலுக்காக சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,747 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|