பாதுகாப்பு துறைக்கு நவீன தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி!

வேகமாக மாறிவரும் உலகில் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேற்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 10வது பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாதுகாப்பு துறை தொடர்பான பரந்த அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவரும் பாதுகாப்பு கல்லூரிக்கு பாராட்டுக்கள். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி மூலம் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடையக் கூடிய நிலை ஏற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் முயற்சியெடுத்ததாகவும், பாதுகாப்பு படையினருக்கு எதிராக சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கும் அதனால் உள்நாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கும் அந்த முயற்சிகள் உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 10வது பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 64 அதிகாரிகளும் கடற்படையைச் சேர்ந்த 26 அதிகாரிகளும் விமானப்படைச் சேர்ந்த 24 அதிகாரிகளும் பங்களாதேஷைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் சீனா, இந்தோனேசியா, மாலைத்தீவு, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, செனகல் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரியும் தமது கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்து தமது PSC பட்டத்தினை பெற்றுக்கொண்டனர்.
Related posts:
|
|