பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கோத்தபாய ராஜபக்ச?

நாட்டின் புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளராக கபில வைத்தியரத்ன செயற்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பதவிக்கு கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உடன் அமுலுக்கு வரும் வகையில் 58 காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்
ஆரம்பமானது நாடாளுமன்ற கூட்டத் தொடர்: பிரதமர் மஹிந்த உரை!
அனைத்து வாகனங்களுக்கும் புதிய நடைமுறை - நிதி அமைச்சு!
|
|