பாதுகாப்பு கடவை அமைத்து தரும்படி கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அண்மையில் பாரிய விபத்து இடம்பெற்ற புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை ஒன்றை அமைத்து தருமாறு கோரி இன்று காலை அப்பகுதி மக்கள் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா்.
இந்நிலையில் போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர்.
ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக கூறியதும் அதனை ஏற்காத மக்கள், மின்னினால் இயங்கும் பாதுகாப்புக் கடவையை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக வழங்குமாறும், தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் அதன் பின்னர் தமது போராட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.
இதேவேளை மக்களின் போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே சென்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|