பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை – அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!

Friday, September 24th, 2021

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமண்டா ஜுவல், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உயரதிகாரியுடன் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பிராந்திய பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையை பராமரிக்க மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக அனைத்து  பிராந்திய நாடுகளுடனும் இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்கும் என பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்தார்.

இதேவேளை, இரு தரப்பினரும் தற்போதுள்ள பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக உறுதியளித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: