பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் கடமை அரசாங்கத்திடம் -ஜனாதிபதி!

Tuesday, January 31st, 2017

 

நாட்டின் இராணுவ, கடற்படை, வான்படை உள்ளிட்ட முப்படைகள் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையை சார்ந்தவர்கள் உயிர்த் தியாகத்துடன் மேற்கொண்ட அர்ப்பணிப்புகளை நன்றிக் கடனுடன் நினைவுபடுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறையினர் நாளைய சவால்களை வெற்றிகொள்வதற்கு அவர்களை சகல துறைகளிலும் வலுப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் குறைவின்றி மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை சிங்க படையணியிடம் ஜனாதிபதி சிறப்பு கோல் (Baton) மற்றும் படையணிக்கான சிறப்புக் கோல் என்பவற்றை கையளிக்கும் நிகழ்வு அம்பேபுஸ்ஸ சிங்க படையணி மையத்தில் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படைகளுக்கான மேம்பாடுகள்  குறித்து  கருத்து  வெளியிட்டார்.

maithripala-sirisena