பாதுகாப்புச் செயலாளர், அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு!

Thursday, July 13th, 2017

புதிய பாதுகாப்புச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கபில வைத்தியரத்னவை, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும், துணைத் தூதுவருமான ரொபட் ஹில்டனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.இருதரப்பு மற்றும் பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் ரொபட் ஹில்டனுடன், அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு தலைவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.கடந்த 4ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கபில வைத்தியரத்னவை முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக ஜப்பானிய தூதுவர் சந்தித்திருந்தார்.  இந்நிலையில், அமெரிக்காவின் இராஜதந்திர விவகாரங்களுக்கான அதிகாரி ரொபர்ட் ஹில்டன் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: