பாதுகாப்புக் கருதி ஒருவழிப்பாதை!

Saturday, May 4th, 2019

பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட ஹாட்லிக்கல்லூரி மற்றும் மெதடிஸ் பெண்கள் பாடசாலை வீதியும் நீதிமன்ற வீதியும் சந்திக்கும் சந்தியிலிருந்து கடற்கரை வீதி வரை நாளையதினம் 6 ஆம் திகதி திங்கள்கிழமை தொடக்கம் பகுதிநேர ஒருவழிப்பாதையாக மாற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு காலை 6 – 8.30 மணியிலும் மதியம் 1-3 மணிவரை ஒருவழிப்பாதையாகப் பிரகடனப்படுத்தப்படுவதுடன் அந்நேரங்களில் கல்லூரி வீதியூடாக வரும் வாகனங்கள் நீதிமன்ற வீதியூடாக வெளியேற வேண்டும்.

அத்தோடு குறித்த பாடசாலை வீதியும் நீதிமன்ற வீதியும் சந்திக்கும் சந்தியிலிருந்து கடற்கரை வீதி வரையும் நீதிமன்ற வீதியிலிருந்து முதலியார் வீதிச்சந்தியிலிருந்து  கல்லூரிச்சந்தி வரை எந்தவொரு வாகனங்களும் பாடசாலை நாட்களில் நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: