பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன் – அமைச்சர் டிரான் அலஸ் உறுதி!

Tuesday, May 23rd, 2023

தனது உயிருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்ற அறிந்தே இந்த பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறான மிரட்டல்கள் வந்தாலும் தான் ஒரு அடிகூட பின்னிக்கபோவதில்லை என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: