பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Thursday, April 14th, 2016

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றி வரும் பாதுகாவலர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்..

இதனால் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை கடக்கும் போது அவதானமாக கடக்க வேண்டுமென ரயில்வே திணைக்களம் கோரியுள்ளது.

தமக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சங்கச் செயலாளர் நிமால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

உரிய தீர்வுத் திட்டம் வழங்கப்படாவிட்டால் குடும்ப உறுப்பினர்களுடன் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகத் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் போராட்டம் குறித்து ரயில் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நிதானமாக ரயிலை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: