பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் இன்று காலை முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதிலுமுள்ள 687 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் தொழில்புரியும் 2,061 ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக செயலாளர் நிமல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட போது ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் எனினும் அரசாங்கம் இதுவரை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கவில்லை எனவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் நாடு முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வலி. வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் விடுவிப்பு!
பேருந்தை தீவைத்து எரிக்க முயற்சி - அச்சுவேலியில் பதற்றம்!
முடக்கப்பட்டது புங்குடுதீவு !
|
|