பாதீட்டில் சுகாதாரத் துறைக்காக 580 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில், சுகாதாரத்துறைக்காக 580 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்படுகின்ற பாரிய நிதி இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் சுகாதாரத்துறைக்காக அதிக தொகை ஒதுக்கப்படவுள்ளது. வழமையாகப் பாதுகாப்பு மற்றும் கல்வித்துறைகளுக்கும் அதிக தொகை ஒதுக்கப்பட்டு மூன்றாவதாக சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கப்படும்.

எனினும் இந்த முறை சுகாதாரத்துறைக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: