பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது!

Friday, November 18th, 2016

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதிநாளான இன்று (18) குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில், ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 55 உறுப்பினர்கள் தங்களது வாக்கை எதிராக வழங்கியிருந்தனர். இதேவேளை, வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில் 07 பேர் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்கத்கது. அந்த வகையில் 107 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவு – 162 (ஐ.தே.க., ஶ்ரீ.ல.சு.க., இ.தொ.கா., ஈ.பி.டி.பி)
எதிர் – 55 (ஜே.வி.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி)
சமூகமளிக்காதோர் – 07

1314195337B2 copy

Related posts: