பாதீட்டினூடாக அரச ஊழியர்களது ஊதிய விவகாரத்திற்கு தீர்வு – நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, July 30th, 2021

அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைவமை சூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்ட போதிலும் இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ரமேஷ் பத்திரண, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, விமல் வீரவன்ச ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போதே அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: