பாதீடு தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று !

Monday, October 9th, 2017

வரும் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு அமைய அடுத்த வருடத்திற்கான செலவு 3 ஆயிரத்து 982 பில்லியனாகவும், வருவாய்  2ஆயிரத்து 175 பில்லியனாகவும் அமைந்துள்ளது .வரவு செலவு திட்டம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது

Related posts: