பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்ரிக்கை!

Wednesday, September 4th, 2024

தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம் ஏஎல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்பதை கண்டுபிடிப்பதற்கான அதிகாரம் எங்களிற்கு உள்ளது.

முறைப்பாடு இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தீர்மானங்கள் கிடைத்ததும் நாங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்  ஏதாவது உள்ளனவா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: