பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்!

Thursday, June 22nd, 2017

சீரற்ற காலநிலையால் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 58,000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்படவுள்ளன.மேலும், மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.

கொழும்பு , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் குறித்த வேலைத்திட்டம் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை இன்றுமுதல் கைது செய்ய நடவடிக்கை - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் மீள ஆரம்பம்!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்...