பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 14 திகதி நஷ்டஈடு!

சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடு நாளைய தினம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் குறித்த மதிப்பீடுகளின் அடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் தற்போதுள்ள மதிப்பீட்டின்படி முழுமையாக சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எண்ணிக்கை 654 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மதீப்பீடுகள் நிறைவடைந்ததன் பிறகு சீதாவாக்கை பிரதேச சபைக்குட்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி சேதமடைந்த வீடுகளுக்கு ரூபா 50,000 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்
Related posts:
யாழ் மாநகர சபைக்கு மும்முனைப் போட்டி : அதிகாரத்தை கைப்பற்ற இரகசிய வாக்கெடுப்பு!
பிரதமர் மஹிந்தவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை - பிரதமர் செயலகத்தின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச தெரிவ...
ஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு - கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்...
|
|