பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இலவச சட்ட உதவி!
Saturday, January 27th, 2018
குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டதரணிகள் ஆஜராக முன்வந்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை சேர்ந்த சட்டத்தரணி மரினி டி லீவேறா தேசிய சிறுவர் பாதுகாப்ப அதிகார சபை சிறுவர்களின் உரிமை மீறப்பட்டது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தாமதம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நலன் கருதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டப்பிரிவு இவர்களுக்கு உதவுவதற்கும் நீதிமன்ற வழங்கு விசாரணைகளை நிறைசெய்ய எதிர்பாத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்
இவ்வாறான சட்ட உதவிகளை கோரவிரும்புவோர் 1929 [Childline Sri Lanka] என்ற தொலைபேசியினுடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார் - சீசெல்ஸ் ஜனாதிபதி
இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!
தரம் ஐந்து பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்!
|
|