பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்காக கொடுகடன் உத்தரவாதம் – மத்திய வங்கி தீர்மானம் !

Monday, June 29th, 2020

கொரோனான காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்காக ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவித்தொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகளின் கடன் வழங்கலை துரிதப்படுத்துவதற்கு ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,

இந்த திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 150 பில்லியன் ரூபா வரையறையினுள், சௌபாக்யா கொவிட் – 19 மறுமலர்ச்சி வசதி மற்றும் நாணயவிதிச் சட்டத்தின் 83ம் பிரிவின் கீழ் நாணயச்சபையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட புதிய கடன் வசதிகளும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: