பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குமேலும் நிவாரண உதவிகள். ரவி கருணாநாயக்கவிடம் நரேந்திரமோடிஉறுதி!

Wednesday, June 7th, 2017

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜையும் சந்தித்துள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைவெளிவிவகாரஅமைச்சராகரவிகருணாநாயக்கபதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கன்னி விஜயமாக இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்குவிஜயம் மேற்கொண்டிருந்தவெளிவிவகாரஅமைச்சர் ரவி கருணாநாயக்கபிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது இலங்கையில் கடந்தமாத இறுதியில் சீரற்ற காலநிலைகாரணமாக ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பாக ரவிகருணாநாயக்க இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும். இதனடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் நிவாரண உதவிகளை வழங்க இந்தியாதயாராக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்புக்கு பின்னர் இந்தியவெளியுறவு அமைச்சர் சுஷ்மாசுவராஜையும் சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சின் செயலர் ஜெய்சங்கரையும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்தித்து கலந்துரையாடியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்தியாவுக்கான விஜயத்தை நிறைவுகொள்ளும் ரவிகருணாநாயக்க இன்று இரவு நாடுதிரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சராக ரவிகருணாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் வெளிநாடுகளுக்கான கன்னிவிஜயமாக இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: