பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே கொரோனா தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி – சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Tuesday, January 19th, 2021

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்துவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு மேற்கொள்வதே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் நாளொன்றுக்கு 15,000 முதல் 20,000 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தற்போது சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் சோதனைகளை போதுமான அளவு மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொற்று மேலும் பரவாமல் பார்த்துக் கொள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

000

Related posts: