பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய அடையாள அட்டை !

இயற்கை அனர்த்தத்தால் எவரேனும் தேசிய அடையாள அட்டையை இழந்திருந்தால் அல்லது அடையாள அட்டை சேதமடைந்திருந்தால் அவ்வானோருக்கு புதிய அடையாள வழங்கப்படவுள்ளது.
உரியவர்கள் பொலிசில் முறைப்பாடு செய்து, கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அங்கீகாரத்துடன் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தின் மூலம் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
புதிய அடையாள அட்டைகளை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம உத்தியோகத்தர்களும் பிரதேச செயலாளர்களும் உதவி செய்ய தயாராக இருக்கிறார்களென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேலும் கூறினார்
Related posts:
அன்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்க இலங்கையில் அனுமதி!
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
சபை முதல்வராக தினேஷ், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க நியமனம்!
|
|