பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை – போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர்!

Friday, November 29th, 2019

பாதசாரிகள் கடவை தவிர்ந்த ஏனைய இடங்களில் வீதியை கடப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீதியை கடக்க பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் டிசம்பர் 31ஆம் முதல் ஜனாதிபதி முதலாம் திகதி வரை கடும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதன் பின்னர் குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வேண்டும்- மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்!
ஐந்தாம் தரப்  புலமைப் பரிசில் பரீட்சை குறிப்பிட்ட பாடத்தை மாத்திரம் மையப்படுத்தியதாகவேயுள்ளது: கல்வி...
கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சி-919 பயணிகள் விமானம்!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று !