பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, August 14th, 2020

இலங்கைக்கு பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக அமைச்சில் நேற்று வியாழக்கிழமை தமது கடமைகளை ஆரம்பித்து ஊழியர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – நாட்டிற்குப் பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும்.  நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற விதமான வர்த்தகக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டுக்குப் பொருத்தமானதும் மக்களின் நலனுக்கு ஏற்றதுமான புதிய சட்டங்களும் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருத்தமற்ற சட்டவிரோத வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

Related posts:


எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய - இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!
வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்படும் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள...
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் ...