பாண் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!

Thursday, September 12th, 2019

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

6 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது கோதுமை மா நிறுவனங்கள் முன்னர் இருந்த விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே பாணின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


மாணவிகள் துஷ்பிரயோகம்: பெரியபுலவு மகா வித்தியாலய பாடசாலை சூழலில் பதற்றம்!
நவம்பர் மாதம் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு கிடைக்கும்?
ஐ.ஓ.சி எரிபொருளை பெறமாட்டடோம் - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!
நிரந்தர தீர்வை  எட்டவேண்டுமாயின் ஈ.பி.டி.பியின் அரசியல்பலம்  உறுதிப்பட வேண்டும் -  கட்சியின் யாழ் மா...
சிறைச்சாலை புலனாய்வு பிரிவை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!