பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாமை தொடர்பில் குற்றச்சாட்டு!

Wednesday, February 20th, 2019

இலவசப் பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்னமும் நிறைவு பெறவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பாடசாலைகளில் இலவசப் பாடப்புத்தகங்கள் இன்னமும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதமளவில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் இன்னமும் விநியோகிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: