பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட புகையிரத சேவை!

பாடசாலை விடுமுறை காலத்தில் மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மலையக பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக் கூடும் என்ற நோக்கில் விஷேட புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடுமுறை காலத்தை முன்னிட்டு மலைநாட்டுக்கான புகையிரத மார்க்கத்தில் விஷேட புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் நாளாந்தம் காலை 7.30 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை வரை பயணித்து மறுநாள் முற்பகல் 9.30 அளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Related posts:
வித்தியா கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும...
உயிர்த்த ஞாயிறு விவகாரம் - அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனா...
|
|