பாடசாலை வாகனங்களின் வர்ணத்தில் மாற்றம் – வெளியானது வர்த்தமானி!

Wednesday, July 8th, 2020

பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு கட்டாயமாக மஞ்சள் வர்ணம் பூசப்பட வேண்டும் என்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான சட்டம் புதிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் ஏற்கனவே பாடசாலை வேன் உரிமையாளர்கள் சம்மேளனத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணம் பூசுவதற்கான செலவுகள் குறித்து வேன் உரிமையாளர் விடுத்த வேண்டுகோள் தொடர்பில் ஆராய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related posts: