பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு: யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு !

Thursday, May 31st, 2018

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் உள்ளாடைகள் என்பன பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சீருடை, கழுத்து பட்டி,  செருப்பு, உள்ளாடை ஆகியன இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது என கண்டறிந்துள்ளனர்.

குறித்த தடயப் பொருட்கள் யாருடையது என இன்னமும் கண்டறியப்படாமையால் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே குறித்த பொருட்கள் விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மாணவி ஒருவரது என்றும் அவை குறித்த மாணவியால் விளையாட்டு நிகழ்வின்போது கலந்துகொள்வதற்காக கழற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை தவறவிடப்பட்டதாகவும் இதுவே குறித்த பகுதியில் அனாதரவான முறையில் கண்டெடக்கப்பட்டுதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: