பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Monday, July 4th, 2016
கடந்த மாதம் யாழ் நகரிற்கு அண்மையிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்ட்ட சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவினை யாழ் நீதிமன்ற நீதிபதி எஸ் சசிதரன் பிறப்பித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர், குற்றத்தினை மறைக்க முயன்ற அதிபர் மற்றும் ஏனைய இரண்டு ஆசிரியர்களும்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் குறித்த பாடசாலையின் மாணவர்கள், பாடசாலை அதிபர் மற்றும் அசிரியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: