பாடசாலை மாணவர்களுக்கு TAB – கல்வியமைச்சர் உறுதி!
Saturday, June 23rd, 2018
பாடசாலை மாணவர்களுக்கு TAB (கைக்கணனி) வழங்கும் நடவடிக்கை கைவிடப்படவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்திற்கு செல்லும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் விரைவில் TAB வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு TAB வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அது மீளவும் ஆரம்பிக்கப்படும் எனவும் TAB களை மீள வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்பத்துடன் எமது கல்வி முன்னோக்கி நகர வேண்டும். கடந்த காலங்களில் நாம் பாடசாலை சென்ற போது பாடசாலை கண்காணிப்பாளர்கள் இருந்தார்கள். பாடசாலையின் தரம் பற்றி அவர்கள் கண்காணிப்பு செய்வார்கள்.
எதிர்காலத்தில் இவ்வாறு காண்காணிப்பு நடத்தும் நோக்கில் சுயாதீன கண்காணிப்பு சபையொன்று நிறுவப்பட்டு பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமித்து அதன் கீழ் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒவ்வொரு ஆணையாளர் நாயகங்கள் நியமிக்கப்படுவர்.
இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை கல்வியின் தரம் மட்டுமன்றி பௌதீக வளங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கண்காணிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts: