பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைமையில் மாற்றம் ஏற்படுத்த அவதானம் – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்!

Friday, March 18th, 2022

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான மதிப்பீட்டுத் தொகையிலும், உணவு முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உணவுக்காக ஒதுக்கப்படுகின்ற மதிப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதென பாடசாலை கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: