பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்!

Tuesday, January 9th, 2018

அடுத்தவாரம் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர்நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை கா.பொ.த சாதாரண தரம் மற்றும் கா.பொ.த உயர்தரம் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள  மாணவர்களுக்கு முன்கூட்டியே தேசிய அடையாள அட்டைகளை வழங்கும்நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரைவாக விண்ணப்பிக்குமாறு பாடசாலை அதிபர்களிடம் ஆட்பதிவு திணைக்களத்தின்ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: