பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்!

நாட்டில் 45இலட்ச பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி முறை ஒன்று வரவுசெலவுதிட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட் விவாதத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும் என்று அமைச்சர் கூறினார்.மாணவர்களுக்கு இவ்வாறான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை இதுவே முதன்முறையாகும் ஆகும். விவசாய துறையை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
உரம் மானியம் தொடர்பில் சமகால அரசாங்கம் கடைப்பிடிக்கும் சிறந்த நடைமுறையின் காரணமாக தற்பொழுது நெல் உற்பத்தி செய்யும் வயற்காணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோன்று உற்பத்தியும் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்
Related posts:
மக்களின் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் - பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!
நீதியான தேர்தலை நடத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி!
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!
|
|