பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாட புத்தக பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!

Thursday, September 3rd, 2020

அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 1075 பாட புத்தக பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கஹவத்தை நகரில் அமைந்துள்ள பழைய புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 6 முதல் 11 ஆம் தரம் வரையான மாணவர்களுக்காக 2020 ஆம் கல்வி ஆண்டுக்கு வழங்குவதற்கு 2019 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகங்களே இவ்வாறு மீட்கப்பட்ட பொதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கஹவத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: