பாடசாலை மாணவர்களுக்கும் சட்டக் கல்வி அறிமுகம் – அமைச்சரவை அனுமதி!

Friday, January 11th, 2019

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்ளடக்கப்படவுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாடசாலைக் கல்வித் திட்டத்தில் அரசமைப்பு உள்ளிட்ட அடிப்படைச் சட்டங்களை இணைக்க வேண்டும். அதற்காகக் கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து நீதி அமைச்சர் தலதா அத்துகோரள அமைச்சரவையில் பத்திரத்தை முன்வைத்தார்.

சட்டம் தொடர்பான அடிப்படை அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதானது தற்போதைய அரசுக்குக் கிடைத்த பெரும் வெற்றி.

அரசமைப்புத் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள் குறித்து மாணவர்கள் சிறு வயதிலேயே அறிந்து கொள்வதன் மூலமாக பெரும் நன்மையளிக்கும். அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க சட்டக்கல்வி அனைத்துக் குடிமக்களுக்கும் கைகொடுக்கும். எனவே சட்டக்கல்வியைப் பாடப்புத்தகங்களில் உள்ளடக்குவது தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் முன்நகர்த்தப்படும்.

Related posts: