பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!

Wednesday, January 10th, 2018

மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் கீழ் எல்லோரும் விரைவாக அனுகூலம் பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதன் கீழ் பாடசாலைமாணவர் ஒருவர் இரண்டு இலட்சம் ரூபா காப்பீட்டைப் பெறுகிறார். இதில் மருத்துவ காப்பீடு, வைத்தியசாலை வசதிகள் போன்றவை உள்ளடங்கும்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 2 ஆயிரத்து 200ற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுகூலங்கள் கோரிசமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் காப்புறுதி அனுகூலங்களாக 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: