பாடசாலை மட்டத்திலான மெய்வல்லுநர் நிகழ்வுகள் 14 ஆம் திகதி ஆரம்பம்!
Tuesday, July 5th, 2016வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடத்தும் ஒன்பதாவது பாடசாலைகள் மட்டத்திலான மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகள் எதிர்வரும்-14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த மெய்வல்லுநர் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும்-14 ஆம் திகதி காலை-9 மணிக்கு வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் இ. ரவீந்திரன் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
மேற்படி போட்டிகளில் வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களிலிருந்தும் ஒவ்வொரு நிகழ்விலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்டப் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தகுதி பெறுவர்.
குறித்த போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகளும், பரிசளிப்பும் எதிர்வரும்-18 ஆம் திகதி பிற்பகல்-2.30 மணிக்கு நடைபெறும். மேற்படி போட்டிகளைத் தொடர்ந்து எதிர்வரும்-19 ஆம் திகதி விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் யாழ். துறையப்பா விளையாட்டரங்கு மைதானத்தில் இடம்பெறும்
Related posts:
|
|