பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு புதிய சட்டம்!

Monday, December 19th, 2016

பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கான புதிய கட்டுபாடுகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்துசதற்கு எதிர்பார்த்துள்ளதாக வீதி போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்குளை குறைப்பதற்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுபாடுகளை கொண்டுவருவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எவ்வாறான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் அமைப்புகளிடம் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

faf1 (1)

Related posts: