பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம் – இராஜாங்க அமைச்சர் முன்மொழிவு!
Saturday, June 10th, 2023பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்துள்ளார்;
இன்றைய சிறுவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாது என்பதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் ஆளாகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என்று தெரியாது. என்றும் சில சிறுவர்கள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களும் பாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குருநகர் பிரதேச வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை – நோயாளர்கள் அவதி!
தரம் ஒன்றுமுதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் - கல்வி அமைச்சு!
ஜனவரிமுதல் புதிய பொருளாதார வேலைத்திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
|
|