பாடசாலை நேர மாற்றத்தால் ஆசிரியர்களுக்கு பாதிப்பே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டு!

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின் நேர மாற்றத்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது –
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இந்த நடைமுறை மிகவும் பழையானது. பல ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து நீண்ட தூரத்தில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்றே கற்பித்தல் செயற்படுகளை முன்னெடுக்கின்றனர். அவர்கள் வாகன வசதிகள் தொடர்பில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள் தூர இடங்களுக்கு செல்வதற்காக பேருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பயணிக்கும் பேருந்துகளும் சிலவும் சரியான நேரத்துக்கு சென்றடைவதில்லை. இதனால் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் உரிய சேரத்துக்குச் செல்ல முடியா நிலை உள்ளது. சில பாடசாலைகள் பிற்பகல் 3 மணிவரை கூட இயற்குகின்றன என்று அறிய முடிகிறது. இது யாரால் பிறப்பிக்கப்பட்ட சட்டம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறான பாடசாலைகளில் கற்பிக்கும் பாடசாலை ஆசிரியர்களின் நிலை பற்றி யாரும் சிந்திப்பதில்லையா?
தற்போத நடைமுறைக்கு வந்துள்ள பாடசாலை நேர மாற்றத்தால் தூர இடங்களுக்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
Related posts:
|
|